காலமழை…

வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே தாயகம்
உறவுகள் ஊரவர் கலங்கிட
தொடர்புகளற்று தவித்திட
காலமழையாய் பெருகியே கணதி தந்தது இயற்கையே
அனுதின வாழ்வில் அனர்த்தங்கள்
அல்லற்படும் சொந்தங்கள்
மருத்துவமற்ற நோயாளர்
பாலங்கள் உடைந்த கோலங்கள் பாதைகளற்ற பயணங்கள் ஏதிலி வாழ்வே இடராக இருப்பிடம் அகன்று துயர் தாங்க உறவுகள் இழப்பில் ஊசாடும் வாழ்வியல் சோகம் வரலாறாய் எதிர்காலமும் இடரில் இருளுதே
கால மழையே காவு கொள்ளதே
பாவம் உயிரினம்
பாதை விலக்காதே!நன்றி

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading