” நகைப்பானதோ மனிதநேயம் “

ரஜனி அன்ரன்“ நகைப்பானதோ மனிதநேயம் “ 11.12.2025

ஏற்றத்தாழ்வுகள் அகல வேற்றுமைகளும் ஒழிய
நல்லிணக்கம் சிறக்க நியாயங்கள் பிறக்க
அமைதியை நிலைநாட்ட அமுலானதே மனிதநேயம்
இன்றோ இனம் மதம் மொழியென்று
இறுகிக் கிடக்கிறது மனங்கள்
மண்டியிடுகிறது மனிதநேயம் !

அன்பு என்பது அலங்காரப் பொருளாக
அறமென்பது வெறும் அறிக்கையாக
அனர்த்தங்களின் போது வேடிக்கை பார்ப்பது
ஒருவரின் வேதனையில் மற்றவர் சிரிப்பது
தியாகத்தின் பெருமையினைக் கொச்சைப் படுத்துவதென
சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகவும்
இடர்பாடுகளிலும் நகைப்பாகுதே மனிதநேயம் !

ஆனாலும் இயற்கையின் சீற்றத்திலும் இடிபாடுகளிலும்
சிக்கித்தவித்தோரை சீக்கிரமாய் மீட்டெடுத்து
தம்முயிரையே பணயம் வைத்து உறவுகளை மீட்ட
உன்னதநேயம் மிக்கவர்களை நினைக்கையில்
இன்னமும் மனிதநேயம் உயிர்ப்போடு இருப்பதை
உணரமுடிகிறது எம்மால் !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading