உயிரான உறவு

நகுலா சிவநாதன்
உயிரான உறவு

உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு நெடிதுயர்ந்து ஓங்கும் காதலிது

உள்ளத்து உணர்வுகளில் எழுந்த காதல்
வெள்ளமாய்ப் பெருகிய அந்தக்காதல்
பள்ளம் மேடு பார்க்காமல் ஓடியகாதல்
பாய்ந்து மனமோங்கிய பரிவானகாதலிது

மாலைக் காற்றின் மனதோரம் வந்தகாதல்
மனசு தொட்ட ஊமைக்காதல் இது
கள்ளமில்லா கருணை உடையவன் காதல்
கன்னித் தெய்வமே அம்மா உன்மேல் கொண்டகாதல்

நகுலா சிவநாதன் 1842

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading