போரிருல் எப்போது நீங்கும்

அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி பிணங்களின் குவியல்
சுடுகாடுகளால் நிரம்பும் பூமியின் அவலம்

வெடிகள் குண்டுகள் மனித அவலங்கள்
புகைமூட்டம் கந்தகக் காற்று
அழுகையின் குரல் வேதனையின் கூக்குரல்
மண்வாசனை இரத்தவாசனையாக
கடலாக கண்ணீரின் பெருக்கு

துப்பாக்கி மௌனமாகி எப்போது உறங்கும்
குண்டுமழை எப்போது ஒயும்
இனம் மதம் நாடெனும் வெறி எப்போது தகரும்
மீண்டும் மனிதம் மலர்ந்து போரின் காயங்கள் எப்போது ஆறும்

ஜெயம்
02-04-2027

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading