மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

” சிறப்புக் குழந்தைகள் “

ரஜனி அன்ரன் (B.A) ” சிறப்புக் குழந்தைகள் ” 02.04.2026

சித்திரைத் திங்கள் சிங்காரத்திங்கள்
சிறப்புக் குழந்தைகளைப் போற்றிடும்திங்கள்
சிறப்புக்குழந்தைகள் தினமாம் சித்திரை இரண்டு
சீராய்த்தந்தது ஐ.நா.மன்றும் விழிப்புணர்வை ஊட்டிடவே
சீர்தூக்கிப் பார்த்திடுவோம் சிறப்புக்குழந்தைகளை !

ஓட்டிசமென்பது நோயல்ல குறைபாடுமல்ல
தனித்துவமான மூளையின் செயற்பாடு
மூளையின் அதீதவளர்ச்சியின் மாற்றுத்திறன்
புரிதலும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருந்தால்
சிறப்புக் குழந்தைகளை சிகரம்ஏற்றிடலாம்
தொடர்பயிற்சியே முன்னேற்றத்திற்கு வழி !

கள்ளம் கபடமில்லா பட்டாம்பூச்சிகள்
வெள்ளையுள்ளம்கொண்ட வித்தகர்கள் இவர்கள்
வேற்றுமையானவர் அல்லர் தனித்துவமானவர்
நூறு வண்ணங்களின் நூணுக்கமான சித்திரங்கள்
அதிவிவேகம் கொண்ட கலைவிற்பன்னர்கள்
பரிதாபங்கள் தேவையில்லை அவர்களுக்கு
புரிதல்கொண்ட புன்னகையே போதும் !

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading