கனவுப் பயணம்

வஜிதா முஹம்மட்படுத்துறங்கும் பாய்ப்பரப்பில்
பலநிறச் சிறகுகட்டி
விலாசமின்றி நான்பறப்பேன்
வான்னுய௫ம் பறவைபோல்

குறுக்கக்கட்டி குளமிறங்கி
இடுப்பளவு நீர்மறைத்து
தாமரை அல்லி துணையோடு
நீராடி நிற்கையிலே விரால்செத்தல்
மீன்கடித்து கணுக்கால் மெ௫கேற

விடிபொழுதை வரவேற்று
குயிலோடு குரலிணைத்து
காட்டாறு படுக்கையிலே
கட்டிலாலே நான்விழுந்தேன்
ஆ ௨ம்மா கண்டது கனவா

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading