ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

ராணி சம்பந்தர்

ஆதி காலமே தமது வாழ்வில்
ஆரோக்கியமிடவே அக்கறை
கொண்டது

மர நிழலில் பாதித் தூக்கமும்
மீதித் தியானத் துதியுடனுமே
முத்தி கண்டது

மூளை சுறுசுறுத்து முன்னிற்க
நரம்புகள் விறுவிறுத்து சுரமிட
முடங்கிய முதுகு நாண் பலமிட

மரத்துப் போன கை ,கால் ,விரல்
விறைப்பு நீங்கி சுகம் பெற்றிட
மன அழுத்தம் குறைந்திடுமே

இரத்த ஓட்டம் சீராகி கல்லீரல் ,
பித்தப்பை அசுத்தம் நீங்கிடவே
கெட்ட கொழுப்பும் கரைந்திட
மனதில் உற்சாகம் பொங்கிடுமே

பல வகையில் யோக முத்திரை
என்றும் பதித்திட ஆரோக்கிய
வலுவும் ஆசனங்களும் வாழ்வு
வளம்பெற வழிவகுக்குமே .

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading