கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

கொளுத்தும் வெய்யில்

வேண்டாமே இப்படியொரு எரிக்கின்ற கோடை
தீப்பற்றி எரியுது பூலோக மேடை
கருணையில்லா கதிரவன் கனலாய் கக்க
காலை வேளையிலும் கனத்த சூடு

வீதிகள் வெந்து வெப்பத்தின் வாசம்
வீட்டின் உள்ளேயும் உஷ்னமாய் சுவாசம்
காற்றும் வெப்பத்தை சுமந்தே வீசுதே
வாட்டியே உடலை வதைத்தே செல்லுதே

சூட்டின் சுமையை உயிரினம் உணர்கின்றது
நிழலுக்காக மரத்தை தேடி ஓடுகின்றது
மரத்தின் இலைகள் சோர்ந்தே நிற்கின்றன
விழும் நிழலும்கூட சூடாய் விழுக்கின்றது

ஜெயம்
25-06-2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading