நீரும் நெருப்பும்

ராணி சம்பந்தர் பேரும் புகழுமிக்க உலகிலே மாந்தரும் ,பயிர் நிலங்களும் கால் நடைகளுமிருந்த இடம் தெரியா அழிந்திடும் வேகம் மண்ணிற்கு...

Continue reading

நீரும் நெருப்பும்

ராணி சம்பந்தர்

பேரும் புகழுமிக்க உலகிலே
மாந்தரும் ,பயிர் நிலங்களும்
கால் நடைகளுமிருந்த இடம்
தெரியா அழிந்திடும் வேகம்

மண்ணிற்கு கட்டுக்கடங்காத
சிவந்த கண்ணில் தெரிந்ததே
நெருப்பு எரிக்கும் கோபம்
விண்ணிற்கோ விட்டுவிட்டுக்
கொடுக்கா பழி தீர்க்கும் சாபம்

மனித நெஞ்சு பிழப்பது போல
அன்றாடம் கடலடியில் தோண்டி
இரும்புக் கம்பிகள் துளைக்கும்
கடல் அலையின் கொதிப்புமே

நீரும் நெருப்பும் போட்டி போட்டு
துரத்தித் துரத்திட எதிர்பாராத
நேரத்தில் குழியில் புதைத்திட
பதைபதைக்கும் சோகம்

இயற்கை நேசித்த காலமன்று
செயற்கையோ இயற்கையை
அழிக்கும் அலங்கோலமின்று
இதுவே மலை ,கடல் குமுறிக்
கொந்தழித்து வெடித்து சிதறிட
அந்தோ பரிதாபமே .

கொ

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading