மொழியே முகவரி

ராணி சம்பந்தர்

தரணியில் நிகரில்லாத தமிழ்
மொழி அருவரியே தொடங்கி
இறுதி மூச்சிலே அடங்கியதே

உணவுப் பசி உறவுப் பசியும்
இல்லாது நடமாடும் மனிதர்
இணைய நட்பு தொடங்கியதே

முந்திய மூதாதையர் பரம்பரை
வளர்த்து கற்றோர் சபையிலே
உயர மொழி அரவணைத்ததே

பிந்திய சந்ததியினர் வாழுவதோ
அந்நிய தேசமதில் பிற மொழியே
ஈர்ப்பில் தாய் மொழி அக்கறையும்
விருப்பும் இன்றி முடங்கியதே

இனிய இதுவே தகவல் தொடர்பு
இளையவர் ,மூத்தோரில் என்பது
மறந்து மொழியே முகவரி
அதுவும் தொலைந்து கூண்டில்
அடைபட்டதே பரிதாபமாய் .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading