23
Sep
தெரிந்து கொள்ள முடியா மனம்
ராணி சம்பந்தர்
எத்தனை தரம் நடந்து நடந்து
கடந்தாலும் ஒருபோதுமே
அண்டவெளியை அளக்க
முடிவதில்லையே
இத்தனை மாந்தரைப் பற்பல
தடவை வாழ்வில்...
எத்தனை தரம் நடந்து நடந்து
கடந்தாலும் அண்டவெளியை
ஒரு போதும் இன்று வரையும்
அளக்க முடிவதில்லையே
இத்தனை மாந்தரைப் பல பல
தடவை வாழ்வு சந்தித்தாலும்
நெஞ்சில் என்ன இருக்கிறது
என இயந்திரங்கள் எதிலுமே
அது தெரிவதில்லையே
நிலைமாறும் உலக வட்டமதில்
அலை பாயும் ஆழ் மனதிலே
வலை பின்னி குழப்பும் மூளை
அழாப்பிய கனவு கலைவதும்
கூடப் புரிவதில்லையே
ஒவ்வோர் சோகங்கள் மகிழ்வு
ஆராய்ந்தால் அத்தனையும்
சுமந்திடும் நீண்ட நிம்மதிப்
பெருமூச்சுக் கூட என்றும்
தங்குவதில்லையே .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.