நவீனம் இதுதானா?

நகுலா சிவநாதன் நவீனம் இதுதானா? பழந்தமிழர் பண்பாடு பண்பட்டுப் போகுது நிலமிழந்து நாமும் புலமதில் வாழ்வாய் அமிழ்தினிலும் இனிய அருந்தமிழ் மொழியும் ஐரோப்பிய...

Continue reading

தொலைந்த புன்னகை 96

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-09-26

கண்ணாடி முன் நிற்கையிலே
காணவில்லை அந்த முகம்
காலம் கொண்டு சென்றதுவோ?
கள்ளமற்ற என் சிரிப்பை

ஒருகாலம் பூத்த முகம்,
ஒளியிழந்து போனது ஏனோ?
ஊர் நினைவும் கொஞ்சம்
ஊசலாடிச் செல்கிறதோ

வாழ்க்கை தந்த காயங்கள்
வலியின் வரியாக வரையுதே
அழகான விடியலொன்று
அண்மையிலே நெருங்கி வரும்

மெய்யான என் புன்னகை
மீண்டும் மலரும் முகத்திலே
திரும்பி வரும் புன்னகையில்
தொடங்கட்டும் எம் புதுவாழ்வு..

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading