24
Sep
இல்லறத்தின் இன்பம்
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள் துளிர்க்கட்டும்.
சிதைந்த வீட்டு வாசலிலே
சிறார்கள் சிரிக்கட்டும்,
பகைமை கொண்ட இதயங்கள்
பாசத்தில் மலரட்டும்
பாசாங்கு நிறைந்த மனிதரின்
வேஷங்கள் கலையட்டும்
நேசங்கள் நிறைந்து தேசமெல்லாம்
நிம்மதி நிலைக்கட்டும்.
இயற்கை செழித்து இனியாவது
இல்லறம் நல்லறமாகட்டும்
பூக்களின் நறுமணம் போலவிங்கே
பூமியில் இதயங்கள் பூக்கட்டும்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.