நம்வாழ்வின் வேர்கள்…..

ரஜனி அன்ரன் (B.A) …நம்வாழ்வின் வேர்கள்…. 01.10.2026

மனிதனின் முழுமையே முதுமை
முடிந்தவரை நேசித்துப்பார்
தெரியுமே அதன் அருமை
முதுமையென்பது யாவர்க்கும் பொதுமைதான்
அதை ஏனோ மறுக்குது இளமைதான்
ஆயிரம் உறவுகள் எமைச் சூழ்ந்திருந்தாலும்
நம்வாழ்வின்பலம் முதியவர்களின் வேர்களில்தான் !

தங்கள் இளமையை எமக்காய் தொலைத்து
தங்கள் கனவுகளை எமக்காய் புதைத்து
சுருங்கிய தோல்களுக்குள்
வருந்தியே எம்எதிர்காலத்தை
பத்திரமாய் செதுக்கிய சிற்பிகள்
வேர்களாய் எமைத்தாங்கி விழுதாய் சுமந்தவர்கள்
என்றும் எம்வாழ்வின் வேர்களே !

வார்த்தைகளில் அடங்காப் பேரறிவு
வாழ்க்கை கற்றுத்தந்த பேரனுபவம்
நடமாடும் நூலகமாய் நயம்படஉரைத்த
நம்முதியோர்தான் என்றும் எம்வாழ்வின்வேர்கள்
வேர்களை மதிப்போம் விழுதுகளாய்க் காப்போம் !

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading