06
Oct
ராணி சம்பந்தர்
பெற்றோர் போற்றி நட்டு
வைத்த நினைவு சின்ன
மரங்கள் மெல்ல வளரவே
மல்லுக்கட்டிய காலநிலை
சொல்லுக் கேட்டு...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள் (தொடர்ச்சி)
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
பிறந்தநாள் மகளுக்காக…117
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய் வரவே
கையில் வந்து தவழ்ந்த நாள்
கண்கள் மகிழ்ச்சியில் நனைந்த நாள்
இதயம் இதமாய் உணர்ந்த நாள்
இன்பம் என்னுள் நிறைந்த நாள்
காலங்கள் காட்சிகள் ஓடி மாறினாலும்
கைக்குள் சின்னக் குழந்தையே நீயம்மா
துன்பங்கள் உன்னைத் தொடராமல்
துயரங்கள் உன்னைத் தழுவாமல்
அன்பும் நம்பிக்கையும் அரவணைத்து
அழகாக வாழ்ந்திடு செல்லமகளே
நல்ல பெயர் உன்னை தொடரட்டும்
நேர்மை உன் துணை ஆகட்டும்
வீழ்ந்தாலும் எழும் வலிமை பெருகட்டும்
வெற்றி பெற பிறந்தநாள் வாழ்த்துகள்..
Author: Jeba Sri
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...