வேதனையும் சாதனையும்……

இரா.விஜயகௌரி நிதமும் தொடரும் நித்திய பொழுதில் குருத்துகள் வரு நாள் சருகுகளாகும் பயனுறு வேளை பருகிச் சுவைத்து-பின் நொடிந்த...

Continue reading

இலக்கியவானின் நட்சத்திரம்…

ரஜனி அன்ரன் (B.A.) இலக்கியவானின் நட்சத்திரம்... 22.10.2026 ஈழத்து இலக்கிய உலகை இனிய படைப்புக்களால் அலங்கரித்து கவிதைநாடகம்...

Continue reading

வேதனையும் சாதனையும்……

இரா.விஜயகௌரி
நிதமும் தொடரும் நித்திய பொழுதில்
குருத்துகள் வரு நாள் சருகுகளாகும்
பயனுறு வேளை பருகிச் சுவைத்து-பின்
நொடிந்த நொடியில் விலகுதல் முறையோ

நாளிம் தொடரும் நம் வழிப் பாதை
வெற்றிகள் தோல்விகள் படிமுறை தாமே
விழுதலில் கற்று எழுதலில் உயிர்த்து
வேள்வித் தீயை கடப்பதில் வெற்றி

தோள்களைத்தேடி சாய்ந்திட முயலின்
நிமிர்ந்திட நமக்கு சாத்தியமில்லை
காயங்கள் நாளும் குவிந்திடக் கூடும்
கடிதினை விலக்கிஎழுந்திடல் வாழ்வு

சிலந்தி வலைக்குள் சிக்கித் தவித்தால்
மாயவலைக்குள் மாய்வது உறுதி
எழுந்திடு புரிந்திடு வாழ்வே சிலகணம்
சாதனைத்தொடுகையை சாத்தியமாக்கிடு

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading