Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.05.2024
இலக்கம்-266
“நிர்மூலம்”
—————
மூலம் நட்சத்திரம்
பிறந்தோர்
வீடுகளில் யாவும் தொலைவு
முள்ளிவாய்க்கால் போரின் விளைவு
ஒட்டு மொத்த தமிழினம் அழிவு
எம் உறவுகளின் வீடு காணிகள் சொத்துக்கள்
அரசாங்க இராணுவத்தால் அபகரிப்பு
நெற்றி வெயர்வை நிலத்தில் சிந்த
பாடுபட்டு கடன் பட்டு கட்டிய வீடுகள்
கொத்துக் குண்டுகளால் பெரும் அழிப்பு
பயன் தரும் பனை மரங்களெல்லாம்
குண்டடித்து மொட்டைகளாக போகும் பாதையெலாம்
பார்க்க இன்றும் காட்சி
இலங்கை போர் தந்த யுத்தத்தினால்
எம் மக்களின் உயிர்கள் தொடங்கி
உடைமைகள் யாவும்
நிர்மூலமாக ஆக்கப்பட்டதின் விளைவு
வலியும் வடுவும் எம் தமிழ் இனத்திற்கே
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading