Jeya Nadesan May Thienam-222
மே தினமே மேதினியில் (712)
Jeya Nadesan
கவிதை நேரம்-11.05.2023
கவி இலக்கம்-1687
வெறுமை போக்கும் பசுமை
————————————
பசுமை நிறைந்த பூமிதனை
இறைவன் இயற்கையாக பரிசளித்தார்
விதை முளை வளர நீர் காற்று மிதமான வெப்பம்
தாவரங்கள் விதைகளின் வளர்ச்சி
இன விருத்தி செய்ய ஆயத்தமாகிறது
விதை வளர்ந்து பசுமை நிலமாகிறது
முழுதும் காத்து வாழ்கின்ற உழவர்கள்
வெயர்வையை செங்குரிதி ஆக்கி
சிந்திய இடங்கள் பசுமை நிலமாகிறது
இயற்கை அன்னை பூமித் தாய்
பசுமை ஆடையை அணிவித்து
பல விதமாக கண்ணிற்கு அழகு தருகிறது
கரு மேகம் தந்த மழைத் துளிகள் விழுந்த பூமியில்
மனம் பசுமையாகி வளங்கள் வசப் படுகிறது
ஒரு துளியில் உருவாகும் மழைத் துளிகள்
பூமியை காதலித்து பயயிர்களை முளைப்பித்து
மக்களுக்கு பயனாக விளைவை தருகின்றது
பசுமை தனை கண்ட பொழுதில்
துள்ளியோடும் புள்ளினங்கள் வாழுகின்றன
பச்சை பசேலென புற்தரைகள் மரம் செடி கொடிகள்
வெறுமையான நிலங்களை பசுமை ஆக்குகின்றது
