Jeya Nadesan

கவிதை நேரம்-29.06.2023
கவி இலகக்கம்-1714
இறைவன் படைப்பில்
இயற்கை வனப்புகள்
———————————
இறைவன் படைப்பபினில்
இயற்கை வனப்புகள்
எத்தனை அதியங்கள் அற்புதங்கள்
நீல நிறமாக ஓடும் வானமாய்
ஓயாமல் இரையும் கடல் அலைகளாய்
நீந்தி விளையாடும் மீன்களாய்
நீர் நிறைந்த குளம் ஆறு அருவிகளாய்
பச்சை பசேலென பசும் புற் தரைகளாய்
நெல் மணிகளின் அசைந்தாடும் கூத்தாய்
சிறகடித்து பறக்கும் வானத்து பட்சிகளாய்
மண்ணிலே ஊர்ந்து செல்லும் பிராணிகளாய்
ஆற அமர நின்று கொண்டு பரந்த மரங்களாய்
விண்ணிலே பவனி வரும் முகில் கூட்டங்களாய்
விண் மீன்களின் பள பளப்பும் பிரகாசமாய்
கோடை என்றதும் கொழுத்தும் வெயிலாய்
வெயில் அதிகரிப்பில் அதி அழிவுகளாய்
இயற்கை அனத்தங்கள் இடையிடையேயாய்
அத்தனையும் இறைவன் படைப்புக்களாய்
அதில் மானிடம் முத்தான முழுப் படைப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading