Manitha Neyam Madgerathu

Jeya Nadesan

கவிதை நேரம்-11.01.2024
கவி இலக்கம்-1799
மனித நேயம் மடிகின்றது
——————————-
மனித நேயம் என்பது
மானிடத்தின் மகத்தான பண்பு
இப் பரந்த பூமியில் ஆன்மீகம்
அற்றுப் போகின்றது மக்களிடையே
கலங்கும் உள்ளங்கள் கரைகின்றன
பாச உறவுஉகள் ஏங்குகின்றன
அன்பு அரவணைப்பு தவிடு பொடியாகிறது
மனித எண்ணங்கள் மாற்றலாகிறது
பொருளாதாரத்தில் உலகம் மடிகிறது
இல்லார்க்கு உதவ கரம் மறுக்கிறது
குவலயம் வாழ்வை எண்ணி தவிக்கிறது
உறவுகள் தவிப்பு அதிகமாகிறது
நிலையிலல்லா வாழ்வில் மனம் ஏங்குகிறது
தவறுகள் உள்ளக் கதவை தட்டுகின்றது
புறந் தள்ளும் புத்தியினை இழக்கிறது
மனிதனை மனிதனே கொலை செய்கிறது
உண்மைக்கு பதிலாக பொய்யாகிறது
நீதிக்கு பதில் அநீதி தலை தூக்கி நிற்கிறது
தவற விட்ட மனிதரால் மனித நேயம் குறைகிறது
மனித மாண்புகளை அன்பு செய்வதே மனித நேயமே
மனித நேயத்தோடு வாழும்போது வாழ்வு மலர்கின்றது

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading