pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி .
இலக்கம் -537
ஆகா வியப்பில் விழிகள் .(15.03.23.)
—————————————-
பற்றுடையார் (இவர் )தமிழில் ,பேசுடுவார் அழகு மொழியில் .
கற்றதுவும் தாய் மொழியில் ,கடைசிவரை ,மூச்சென்றார் தன்வழியில் .

பெற்ற தாயிலும் மேலென்றார்,நம் மொழியை .
மற்றவர்க்கும் உகந்தளிக்க ,மனமுகந்தார்,தனி வழியில் .

கனத்த வேளையிலும் ,கலக்கமின்றிச் ,சுமந்து செல்வார் .
மனத் தூய்மையுடன் ,மக்களிடம் சேர்த்திடுவார் .

பருத்த ஆலாயிருந்து ,பங்களிப்புச் செய்திடுவார் .
விருப்புடைய பட்சிகளை ,வரவேற்று வளர்த்திடுவார் .
ஆகா …….வியப்பில் ;;;;;;;;; விழிகள் ;;;;;;;
இறுதிவரை தொடரும் ,,,, பணிகள் .
ஆக்கம்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading