புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
Sakthithasan
சந்தம் சிந்தும் சந்திப்பு 261
பெருமை
விண்ணோடு மோதும் மேகங்கள்
என்னுள்ளே மோதும் கேள்விகள்
ஆழியில் கலந்திடும் மழைத்துளிகள்
ஆழத்தை உணர்த்திடும் மனவலிகள்
இரவைப் பகல் அணைத்திடுதா, இல்லைப் பகலுள் இரவு கரைந்திடுதா ?
வானில் நிலவு மிதந்திடுதா ? இல்லை
நிலவை வானம் வலம் வருதா?
உள்ளத்தில் உணர்வுகள் உதித்தனவா ? இல்லை
உள்ளமே உணர்வினுள் அமிழ்ந்ததுவா?
கணத்தினில் மாறிடும் சுபாவத்தின் சுரத்தினை
கனத்துடன் இசைத்திடும் மனதின் வனப்பிது
சுழன்றிடும் இகத்தின் நிகழ்வினை அறிந்து
சுயத்தின் திறனின் அளவினை உணர்ந்து
சுயநலம் மறந்து பொதுநலம் நினைந்து
சுரந்திடும் கருணையைப் போற்றிடு மனமே !
நிகழ்ந்திடும் நிகழ்வுகள் அனைத்தையும்
நிகழ்த்திடும் வல்லமை உடையோன்
நிகழ்வினைத் தேடியே நாமும் இங்கு
நிறைவுடை பிறப்பினை எடுத்தோம்
வருபவை எல்லாம் எமக்காய் தேடும்
விரும்பிய அனுபவப் புரிதல்கள்
வாழ்க்கையின் சூட்சுமம் தெரிந்தால்
வாழ்வெல்லாம் நதியினில் வெள்ளம்
சக்தி சக்திதாசன்
