Sarvi

மாசி

இரண்டாம் திங்களாகி….இரண்டெழுத்தினில் வலுவாகி…பக்திக்கு உளமாகி…மண்ணின் அறுவடையில் பேரின்பமாகி….
அள்ளி இன்பம் கொடுக்கும் மாசியே வருக….வருக…..

ஒரு பக்கம் உன்வரவு கொள்ளை இன்பம்…..மறுபக்கம் மாரடைப்பால்
மண்ணிலிருந்து
விண்ணுலகம் சென்ற எங்கள் தந்தை மறைந்த
திங்கள் மாசியே….
பன்னிரண்டு வருடங்களின் பின் பெற்றிட்ட
தெய்வங்கள் தரிசனம் பெற்றிட….
வேண்டிய விமானச்சீட்டு வாரம் ஒன்று முன்னதாக….ஃபிளைற் இன்னும் எடுக்கவில்லையோ பெரியபிள்ளை….நான் இங்கே வாசலில் குந்திக்கொண்டிருக்கிறன் பிள்ளை எப்பவரும் வருமென…தன் ஆவலை வார்த்தைகள் வர்ணிப்பில் ஒவ்வொரு நொடியிலும் கரைத்தபடியிருந்த “அத்தா ” (தந்தை) ….
மாசித்திங்கள் பதினாறாம் நாள்
அன்னையாக வரம் கொடுத்து
அவனியில் எம்தாயாக இறைவன் ஆக்கிவைத்த நாளில் இன்னுமாக இரண்டு நாள்தான் மண்ணில் என்பதை அறிந்திட முடியாத அத்தாவின் உற்சாகமான மனநிலையில்…அளவிலா சந்தோஷ அதிர்வினால் தான் இதயம் அதிர்வு தாக்கியதோ…..மாசி18ல் வந்த தந்தையின் ஆறாத்துயர் தரும் பிரிவுச் செய்தி…பன்னிரண்டு ஆண்டுகளின் பின் தாய் மண்ணில் காலடி வைத்ததும் மாசியிலே…..
எம் கடைக்குட்டி தம்பியாக “தில்லை” என்ற நற்பண்பாளன் அவதரித்த நாளும் மாசித்திங்கள் 29…

நான்கு ஆண்டுக்கொருமுறை காத்திருந்து பிறந்தநாளை கொண்டாடும் தம்பியின் ஆரவாரத் திருமுகம் மறைந்த வேதனைக் கனம்
இன்றும் மனதினில் அழுத்தம்….
அறுபத்திநாலில்
மாசியில் அவனியில் உதித்த பதிவு ….பதின்மூன்றாம் அகவைத் திருநாளினை பதிவாக்கி….
எழுபத்தியேழு
கார்த்திகை திங்கள் 20ம் நாள்
மாசி தந்த அழகான கோர்வை அறுக்க இறை
தீர்பாகியதே….

ஏதுமே விதிக்கும்
விதி….வெல்லும் வழியாதோ….எம் வாழ்வின் எல்லைவரை ….
மகத்துவமான எம் தாயின் அகவைத்திருநாளும்….கடைக்குட்டித்தம்பியின் திருநாளும் தந்த “மாசி” அகத்தினில் பூத்த திங்களே….

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading