Selvi Nithianandan

விடுமுறை
நான்கு வார விடுமுறை
நாலா பக்கமும் உறவுகள்
நாளும் பிடித்த உணவுகள்
நல்ல பொழுதாய் அமைந்ததே

இடிமின்னல் மழையும் ஒருபுறம்
பூத்துநிற்கும் மலரும் மறுபுறம்
முக்கனியும் வளவில் இருபுறம்
மண்வாசனை முகர்ந்து நானும்

யாழ்ப்பாணம் மட்டக்கிளப்பு திருகோணமலை
கடற்கரைகள் எனஊர்சுற்றி பார்த்ததும்
ஆலயங்கள் விழாக்கள் கொண்டாட்டங்கள்
ஆனந்தமாய் விடுமுறை சென்றதே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading