கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

Selvi Nithianandan

பசி (526)
உயிர்களின் அத்தியாவசியமும்
அன்றாடம் தேவையானதும்
உணர்வின் வெளிப்பாடனதும்
உயிரோட்டமான பசியாகும்

ஒருசாண் வயிற்றுக்கு போராட
பலவகை ஆகாரம் இன்றும்
அறுசுவை உணவினையுண்டு
அகிலத்தில் வாழ்வதும் நன்று

பசிக்காக போராடும் மகவு
பணம் கையில்லாத இருப்பு
தானமாய் உதவிய பொறுப்பு
தரணியில் சிறந்ததோர் வியப்பு

வலியான படம் வழியை காட்டிட
பழியாய் வருமோ தந்தை விளித்திட
தன்மானம் காத்திட இறையும் சேர்ந்திட
தக்க சமயத்தில் உதவிடல் நன்றே.

Nada Mohan
Author: Nada Mohan