ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

Selvi Nithianandan

வலியானதே 585
நான்குவார விடுமுறை
நல்லாய்த்தானும் போனதே
நல்லூரான் திருவிழாவும்
நன்றாயே சென்றதே

முப்பத்துமூன்று ஆண்டுகளாய்
திருவிழா பார்த்ததில்லை
மூன்றும் இரண்டும் சகோதரிகளாய்
மகிழ்ச்சியாய் சென்றதுண்டு

நாட்களும் மெல்ல நகரவே
நாலாபுறமும் அகமும் வாடவே
பேரக்குட்டிகளும் நெருக்கம் கூடவே
விட்டு வர முடியலையே

எங்கள் அப்பம்மா வீட்டிலே போட்டி
எல்லா குட்டிகளும் இப்படியா வியப்பாய்
எனக்கு கிடைத்த வரமாய் எண்ணி
என்றும் நன்றியாய் நானும்

Nada Mohan
Author: Nada Mohan