Selvi Nithianandan

கைக்குள் கையாய்
கைத்தொலைபேசி (600) 02.01.2024
உலகிலே தொழில்நுட்ப வளர்ச்சி
உயர்வில் பலநாட்டினது முயற்ச்சி
ஊக்கமாய் உந்தலாய் பயிற்ச்சி
உறவாய் கைக்குள் அலைபேசி

குடும்பத்தில் பேச்சுவார்த்தை மருவி
குறுகியே போனதும் இதனாலே
குழந்தை முதல் பெரியவர் வரை
குறுச்செய்தி போட்டோ எத்தனைஆர்வமாய்

தொலைவிலே இருப்பவருடன் உரையாடவும்
தொல்லையாய் பலருக்கு இருக்குதே
தொட்டும் தட்டியே முன்னேற்ற முயல்வு
தொடரும் சமுதாயம் மூழ்கியேபோச்சே

கைக்குள்ளே கைபேசியால் பிரமிப்பு
கைதிபோல சிறைப்பட்ட இணைப்பு
கைக்குறிப்பு போன்றாலும் தொடர்பு
கைத்தேறலாய் பலரும் கைபேசிக்குள்ளே.

Nada Mohan
Author: Nada Mohan