vajeetha Mohamed

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

பசுமையின் மடியில்
பழுதாய்போன நொடிகள்

நெளியும் நீரின் ௨ள்ளே
நெகிழியும் அலையும் மேலே

திடமாய் திரவமாய் கழிவு
திகட்டாமல் நோயின் அழிவு

இயற்கையின் பிழைப்பு
இயலாமனிதப் பொறுப்பு

அழிவை நோக்கும் இயற்கை
அறியாமை என்பதா செயற்கை

துளிர்தெழும் மழையை
துடைத்தெறிந்த கழிவு

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்

காணாமல் போனதால்
கண்டெடுக்கப்படுவது நோய்தான்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading