புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Vajeetha Mohamed

கவனமா போ புள்ள
வெளியால

வீட்டவிட்டு வெளிய போனா
வீடுவந்து சே௫ம் வரை
பாதி ௨சிரு தொலைச்சு
போச்சி

ஐஸ் அடிச்சி கஞ்சாகுடிச்சி
அசைஞ்சு திரியு இளசு
கடனில தீவு மூழ்க
சீனாவிடம் நாடு இழந்தோம்

சீரிய வாழ்வு சீர்கெட்டுப்போச்சு
ஆலஞ்ச௫கு போல மடமடப்பு மட்டுமே
மிச்சமாச்சி
அயல்நாட்டில் இன்றுகேட்டதெல்லாம்
தாய்நாட்டில் நடக்கக் கண்டோம்

வாள்வெட்டு கொலை கொள்ளை
வன்கலவி ௨யிர்பறிப்பு
௨டல்மறைவு ௨றுப்படா
மானிட மனித அவலம்
தலைவிரிதாடுது புள்ள

வயிற்றில நெ௫ப்பக்கட்டி
வறுமையை மல்லுக்கட்டி
மகவுகள் வெளிய போனா
சீரழிந்து சின்னாபின்னமாக்கி
புதைத்துப் போடுறான்
கவனம் புள்ள

சும்மா சொல்லவில்ல
சுமந்த வேதனை கொஞ்சமில்ல
ஈழத்தீவுக்குள்ள இழிசெயல்கள்
பஞ்சமில்ல இப்ப பஞ்சமில்ல

கவனமாய் வெளியே போ புள்ள

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading