அபிராமி கவிதாசன்.🙏

12.04.2022

சந்தம் சிந்தும் கவி வாரம்…. 170 /
விருப்பு தலைப்பு !

“ விடியாத இரவுகள் “

விடியாத இரவுகள்
விடியல் தந்திடுமா
துடித்திடும் உயிர்களின்
துன்பம் களைத்திடுமா /

அன்னமில்லை அடுப்பெரிக்க வழியில்லை
அடிப்படை அனைத்தும் தடை
மின்னல் ஒளியாய் நிலவாய்
மின்சாரம் வந்துபோகும் கதியாம் /

விவசாயம் நிலத்தினில்
விதைத்தவர்்உணவாளி
அவசர நிலைவாழ்
அடுக்கு மாடியினர் பட்டினி /

சின்னஞ்சிறிய அழகிய தீவு
செந்தமிழ் செப்பிடும் தமிழர்நாடு
புன்னகை தேசம்
புயலாய் சுருண்டதே /

மடிந்திட்ட என் தேசம்
மலர்ந்து மணம் தருமா
கடிந்திட்ட சாபத்தால்
கரைசேரா போய்விடுமோ /

தாயகத்தின் விடியலுக்காய்
தவித்திருக்கும் உயிர்கள் பல
தியாக உள்ளங்களே
தீர்வொன்று் தந்திடுவீர் /

நன்றி பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading