அபிராமி கவிதாசன்

05,04.2022
சந்தம் சிந்தும்்வாரம்- 169
தலைப்பு !
“ பட்டினி
பட்டினி பசி பஞ்சம் பரிதவிக்கும் உயிர்தஞ்சம்
தொட்டில் குழந்தையும் தட்டுடன் கையேந்தி /

உழவு தொழிலும் உயிரற்று வாடி
பழமை உறவு பாழ்பட்டு ஓடி /

அன்னிய செலவானி அறுந்து கிடக்க
அன்பின் தமிழுறவை அகற்றிக் நடக்க /

ஏற்றுமதி இறக்குமதி ஏற்றமில்லா செழிப்பு
தோற்றுநிற்கும் ஒற்றுமை தோழமை இழப்பு /

நாட்டை கூறிட்டு நாற்திசையும் விலைபேசி
வேட்டை நாயர்கள் விரைந்து வளைவீச /

பட்டினி கொடியநோய் பாரினை வென்றிடுமா
திட்ட தீர்மானம் தீர்வொன்று தந்திடுமா /

நன்றி பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading