புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-262. தலைப்பு!
“நேரம்”
……
நொடிக்கு நொடி இடைவெளியின்றி
நகரும் நேரம்!- உன்
உயிரின் ஆரம்!
நேரத்தை நீ
சரியாய் மதித்தால்
அயராது உழைத்தால்
உன்னை உயர்த்தும் – அந்த
விண்ணின் உயரம்!
உயிர் போனாலும்
ஒரு வேளை
வரலாம் – ஆனால்
நேரம் போனால்
என்றும் வராது!
காலம் கருதி
நடந்தால்
ஞாலம் கைக்கூடும்
என்பார் வள்ளுவர்
நேரத்தின் நேர்த்தி
அறிந்து வாழ்வாய்
என்றும் மகிழ்ந்து!
ஒவ்வொரு நொடியும்
உனக்கென கருது
ஓயாத அலையாய்ப்
போட்டியில் பொருது!
வெற்றி வருவது
உறுதியிலும் உறுதி!
நேரம்
அனைத்தையும்
வெல்லும்
அதை உன்
வரலாறே
சொல்லும் !
நேரம்
அது
வெற்றியின் தாய்!
அதைப்
பற்றி நடப்பாய் – உன்
செயலில் எடுப்பாய்!
அறிவியல் உலகில்
அனைத்தையும்
நேரமே
தீர்மானிக்கிறது!
ஒரு நேரம்
இல்லாமல்
ஒரு நேரம்
ஓர் அணு
விஞ்ஞானி
சினந்தால்
பூமிப்பந்தே
பொடிப்பொடி
யாகிவிடும்!
அந்த நேரம்
நேரத்தைப் பார்க்காமல்
நேரமே கொன்றுவிடும்!
எந்த நேரமும்
முயற்சி செய்
வெற்றி உன்னைத்
தேடி வரும்
நேரம் வரும்!
விண்ணையும்
மண்ணையும்
ஒன்றாய் ஆக்கும் நேரம் – அது
நினைத்தால் தரும்
ஆயிரமாயிரம் – அது
உலக
இயற்கையின்
சார மன்றோ?
இழந்த மண்ணையும்
மொழியையும்
மீட்க
எங்களுக்கும் ஒரு நேரம் வரும்!
அபிராமி கவிதாசன்.
-23.04.2024
