அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-266.

தலைப்பு! “நிர்மூலம்”
……
முள்ளிவாய்க்
காலில்
எம்மக்களும்,
மாவீரர்களும்
சிங்கள
இனவெறிக் காடையரின்
பயங்கரவாத
அரசால்
நிர்மூலம்
ஆக்கப்பட்டதை
எப்படி
எங்களால்
மறக்க முடியும்?

நிர்மூலமாக்கப்பட்ட
எம் தேசத்தை மீட்கவே
உணர்வூட்டுவோம்
நினைந்து நினைந்து
விடுதலை வேட்கை
வெறியேற்றுவோம்!

எமது தாகம்
தமிழீழத் தாயகம் –
என்பதை
என்றும் மறப்போமா?
வென்று முடிக்காமல்
வெற்றி படைக்காமல்
நாங்கள் வீணாய்
இறப்போமா?

போதையற்ற தேசம்
படைத்தோம் – அதை
நிர்மூலமாக்கிய சிங்களம் கண்டோம்
பாலியல் குற்றம்
பரவக் கண்டோம் – அதைத்
தடுக்க முடியா
அரசுகள் கண்டோம்!

நள்ளிரவிலும்
வஞ்சியர் நடப்பார்
நான்கு திசையிலும்
காவல் இருப்பார் – அதில்
நேற்றுக் கிளியாய்
இருந்த தங்கைகள் – இன்று
விடுதலைப் புலியாய்
இருப்பார் – பகைவன்
தொட்டால்
நெருப்பாய் எரிப்பார்!

தற்சார்பு நிலையில்
இருந்த தாயகம் – அதில்
தன்னிகரற்ற – தேசியத்
தலைவரே நாயகம்!
கொடிய சிங்களர்
வாழும் கொழும்பு – அதில்
நாங்கள் அடித்ததே
மாறாத் தழும்பு!

எம்மை நிர்மூலம்
ஆக்கிய எதிரியை
நினைப்போம் – நாம்
நினைத்ததை முடிக்க
சீமான் சின்னமாய்
இருப்போம்!
.
இன்று அழியும்
விளிம்பில்
தமிழினம் பாரீர் – அதைத்
தடுத்து நிறுத்த
ஒற்றுமை தாரீர்!
நம்மை நிர்மூலமாக்கிய
சக்தியைப் பிளப்போம்
நமக்குப் போட்டத் தடையை
உடைப்போம்!

புலம்பெயர்ந்தவர்
புயலாய் எழுவோம் – அறிவுப்
புரட்சியால் ஈழம்
படைக்கத் திரள்வோம்
நம்மை
நிர்மூலமாக்கியப்
படு கொலையரைப்
பிடிப்போம் – அவரை
நிர்மூலமாக்கும்
செயலில் துடிப்போம்!

அடிக்கு அடியைக்
கொடுக்க மறப்போமா?
பல ஆண்டுகள் ஆயினும்
சும்மா இருப்போமா?

அபிராமி கவிதாசன்.
21.05.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading