வரமானதோ வயோதிபம்
வரமானதோ வயோதிபம்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்…267
தலைப்பு! “வேள்வி”
எங்கள் விடுதலை
எங்கே என்பது
எங்கள் கேள்வி! – இன
மொழி உணர்வை நெய்யாய் ஊற்றி
வளர்ப்போம் வேள்வி!
செந்நெல் மணிகளும்
கன்னல் வயல்களும்
சிங்களன் கையிலே – எங்கள்
தேசம் முழுவதும்
நாச மானது
கொடியவன் தீயிலே!
அடக்கு முறைகளும்
ஒடுக்கு முறைகளும்
சொன்னால் கொஞ்சமா ?- சிங்கள
அரசின் இனவெறி
எங்களின் உயிர்ப்பலி
பற்பல இலட்சமே!
புத்தனின் போர்வையில்
இரத்தம் குடித்தவன்
துறவறப் பிக்குவா? – நல்
சமத்துவம் அற்றவன்
ஆள்வதா இன்று
எட்டுத் திக்குமா?
கொத்துச் சரங்களாய்
எம்மின மக்களை
கொன்றவன் காடையன்- தொடர்
கொத்தணிக் குண்டினால்
செத்து மடிந்திட
வைத்தவன் சிங்களன்!
நாகராய் இயக்கராய்
வாழ்ந்தவர் தமிழரே
என்றுபறை சாற்றடா – நம்
உரிமைகள் யாவையும்
பறித்தவன் சிங்களன்
உலகறியக் காட்டடா!
அண்ட வந்தவன்
அடிமையாய் ஆக்கினான்
அறவழி தோற்றது – தலவனின்
மறப்படை எழுந்தது
மலர்ந்தது ஈழமே – பின்
சூழ்ச்சியால் வீழ்ந்தது!
முள்ளி வாய்க்கால்
தமிழர் பிணமாய்
ஆனதுதான் கேள்வி ? – மீண்டும்
தனித்தமிழ் ஈழமே
விடுதலை படைத்திட
வளர்ப்போம் வா!வேள்வி
கவிதை -தொகுப்பில்
நூல்நயம் போலினிக்கும்-கவிஞர்
பாவை அண்ணா – கவிஞர்
மதிமகன் அண்ணா இருவருமே
விடுதலைக் கென்றே
தொடர்க கவிவேள்வி!
அபிராமி கவிதாசன்.
28.05.2024
