செல்லாக்காசு

வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்
உதவாத நிலைக்குள் ஓரமிடும்
ஒற்றை வார்த்தை
செல்லாக்காசு
தரமே தாழ்ந்த நிலை உரைக்கும்
தகுதி இழந்து பலம் குன்றும்
தாக்கம் தந்திடும்
சொல்லிதுவே

தன்னைத் தானே புடமிட்டு
தரத்தில் மின்னை போல் பாய்ந்து
செல்லாக்காசும் ஒர்நாளில்
சிறப்பை எட்டிடும்
பெறுமதியில்
சீராய் நேராய் வாய்ப்புண்டு
விதியின் வசமும்
வாழ்வுண்டு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading