தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அபிராமி கவிதாசன்.

02.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -220
தலைப்பு !
“ நடிப்பு “
உலகமென்ற மேடைதனில்
வாழ்க்கையெனும் நாடகத்தில்
மனிதரெல்லாம் நடிகர்கள்
நடிப்பவர்கள் பாத்திரங்கள் //

தகுதிக்கொரு நடிப்பு
தரத்திற்கொரு நடிப்பு
தன்னலமற்றதொரு நடிப்பு
தன்சுயநலனுக்கொரு நடிப்பு //

பெயருக்கொரு நடிப்பு
பெரும்பாவத்திற்கொரு நடிப்பு
புகழுக்கொரு நடிப்பு
புன்னியத்திற்கொரு நடிப்பு //

வீட்டிற்கொரு நடிப்பு
நாட்டிற்கொரு நடிப்பு
ஊருக்கொரு நடிப்பு
உலகிற்கொரு நடிப்பு //

வாழ்க்கை முடிவினில்
வயது முதிர்கையில்
நாடகம் முடிந்திடும்
நடிப்பும் மறைந்திடும் //

நன்றி வணக்கம் 🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading