இராசையா களரிபாலா

தேடல்
———-
அறிவுப் பசிக்காய் ஆற்றலுடன் தேடல்
வறியவன் வாழ்வில் வளம்பெறத் தேடல்
புரியாத அனைத்துக்கும் பதில்தரும் தேடல்
சரியா தவாறா சரிப்படுத்தும் தேடல்

இயற்கையின் எல்லையை அறிந்திடத் தேடல்
செயற்கையை உருவகிக்க செயல்வீரன் தேடல்
காதலன் காதலியை காலத்தில் தேடல்
ஆதலினால் காதலியும் ஆடவனைத் தேடல்

பணத்திற்காய் பரதேசம் போயும் தேடல்
கணத்தில் பந்தமின்றிக் கனவினில் தேடல்
இனமெலாம் ஒன்றாக இணைந்திடத் தேடல்
மனமே உறுதிகொள மறுவாழ்வு தேடல்

பெற்றோர் உழைப்பில் பிள்ளைகள் தேடல்
கற்றவராய் ஆகவே கடிந்தும் தேடல்
பற்றுடன் பிள்ளைகள் பரவசத்தின் தேடல்
நற்றவை யாவும் நானிலத்தில் தேடல்

இல்லை என்றதும் இறைவனைத் தேடல்
கல்லும் இரங்கிடும் கரணத்தில் தேடல்
புல்லுக்கு மழைநீர் புவியின் தேடல்
அல்லும் பகலும் அகன்றதே தேடல்.

இலண்டனிலுந்து
இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading