வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

இராசையா கௌரிபாலா

பேசாதவர்கள்
—————

நியதிக்குள் சிக்கி நிரந்தரமாய் சிலபேர்
சயனத்தில் ஆழ்ந்து சலித்துப் பலபேர்
சந்தர்ப்பம் அமைந்தும் சரித்திரம் தொலைத்தோர்
பந்தங்கள் இருந்தும் புரிந்து பேசாதோர்

கண்கள் இருந்தும் கதைகள் கூறாது
மண்ணில் வாழ்ந்தும் மரித்தவர்போல் இன்று
உண்மைகள் மறைத்து உறங்காது வாழ்பவர்
எண்ணத்தை அடக்கி என்றுமே பேசாதோர்

தீயவை கண்டு திரும்பாமல் செல்வார்
தூயசிந்தை அற்று திருடன் போலும்
பாசம் நடுவே பாசாங்குடன் வேசம்
பேசாதோர் பேசட்டும் பார்ப்போம் நாமும்.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading