மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இவர் வாழ்நாள் சாதனையாளரே

ஜெயம் தங்கராஜா

கவி 748

இவர் வாழ்நாள் சாதனையாளரே

முயற்சி மூச்சாகியது இலட்சியம் நிழலாய்த்தொடர்ந்தது
அவமானங்களை அனுபவமாக்கி
தோல்வியையும் வரலாற்றாக்கிய
தெளிவான பயணத்தில் வானத்தை வசமாக்கினார்

உறக்கத்தை இழந்தது இரவுகளுக்குத் தெரியும்
தாய்தமிழ் விருந்தளித்தார் உறவுகளுக்குப் புரியும்
கற்றுக்கொண்ட கருத்துக்களால்
வாழ்வை கொண்டோர்கள்
பெற்று முகவரி பேரும்புகழும் கண்டார்கள்

கற்கண்டு குரலதுவால் செவிகளில் தேனூறும்
உதடுகளின் வார்த்தைகள் நிமிடங்களை அர்த்தப்படுத்தும்
உள்ளம் உள்வாங்கி உற்சாகவிழா காணும்
தத்துவத்தின் வித்தகர் இவரென உரைக்கும்

காற்றும் ஞானம் பெற்றது உண்மை
தூற்றினார் சிலர் அடைந்தபின்னர் நன்மை
நேற்றோ இன்றோ நாளையோ மாறாதொருவர்
போற்றிக்கொள்ள இவரைவிட்டால் யார்தானெவர்

புன்னகையிழையோடியே வார்த்தைகள் விளையாடும்
மதுரக்குரலோன் என்பதா அமுதக்குரலோன் என்பதா
அன்றுதொட்டு இன்றுவரை தனித்துவமான குரல்நயம்
இறைவனின் இரகசியம்
இனமதின் அதிசயம்

பொழுது போகவில்லை பொழுதெல்லாம் ஆக்கப்பட்டது
விரல்கள் கோடிக்கணக்கில் எழுத்தைக்கொண்டு மொழிக்கோலமிட்டது
விடாமுயற்சியுடன் இன்றுவரை அடுத்த தலைமுறைக்காய்
நடாமோகன் மொழிப்பணியே எம்மினிய தமிழ்மகனாய்

உறவறிந்து ஊரறிந்து உலகறிந்த அருமை
சிறப்புதனை பெற்றதனால் உறவுகளுக்கு பெருமை
விருதுகளின் நாயகனே வாழ்க வாழ்கவே
உருவாக்கும் பணி நீழ்க நீழ்கவே

ஜெயம்
06-11-2024

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading