மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

எல்லாளன்

“தலையீடு”
சந்தம் சிந்தும் சந்திப்பு 230

பிரிய உறவொன்று
பிரிந்தது ஏன் என்று
புரியா நிலை கொண்டு
புதிரில் என் நெஞ்சு.

ஆரம்பம் முதலாக
அன்பு மிக ஆழம்.
பேரன்பு கொண்டு
பிரிய மனையாளும்.

மன குறைகள் இன்றி
மகிழ்வோடு வாழுதற்கு
பரஸ்பரம் உதவிகள்
பரிமாறல் வழக்கம்.

ஊரில் இருந்தாலும்
ஓயாமல் உரையாடல்
நீளும் தொடர்புவழி
நித்தம் .ஏன் நிசப்தம்?

காலம் சில செல்ல
காரணத்தை அறிந்தேன்.
கூறும் அறிவுரைகள்
கூடுவதும் உறவுக்குள்

வீணான தலையீடாய்
வெறுப்பேற்றும் .அளவாக
பேணாது போயின்
பிசகாகும்.உணர்ந்தேன்

தாய் பிள்ளை என்றாலும்
தலையீட்டை விரும்பாது.
தாம் தாம் தம் வழியில்,
தலை யீடு பெரும் பழியில்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading