10
Mar
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
ஒளவை
சாந்தி
======
தினமும் உன்னைத் தவிப்பாய்ப் பார்த்து
மனதில் சாந்தி மறைவாய் இருக்கும்
கனத்த ஆசைகள் கரைந்து போயின்
உனதாய் ஆகி உயிரை ஆளும்
பணத்தால் வருவது பகட்டுச் சாந்தி
குணத்தால் வருவதே குன்றாது நிலைக்கும்
பிணக்கை மறந்து பாசமாய் நாடின்
மணக்கும் சாந்தி மனிதன் வாழ்வில்
உலகம் முழுதும் உண்மை உறவில்
கலகம் இன்றிக் காலம் நகர்ந்தால்
நிலவைப் போல நித்தம் வாழ்வில்
உலவும் சாந்தி உயிர்கள் மனதில்
காற்றுக் கூடக் கலகம் செய்தால்
தோற்றுப் போகுது தரணியில் சாந்தி
மாற்றம் வேண்டாம் மண்ணில் எதிலும்
ஏற்றுக் கொள்வோம் எல்லாம் சாந்தி.
ஔவை.
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...