அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா அறிவுக்கு இதுவொரு விருந்து அறியாமையை நீக்கிடும் அருமருந்து புத்தியை எட்டவைக்கும் பெட்டகம் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் வாசித்தால்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மாவீரரே
தாய் மண்காக்க தியாகம் செய்த
பாய்யும் இன்றி பட்டிணி கிடந்து
காயந்த உணவும் கண்ணுக்கு எட்டாமல்
மாய்ந்த எங்கள் மாவீர்ரே எழுவீர்/

தாய் மனமும் தடுமாற தயாரானீர்
நோய் கண்ட நேரமும் நெருப்பானீர்
சேய்யைத் தேடிச் சித்தம் கலங்கி
ஓய்ந்த தாய்க்காய் எழுவீர் மாவிர்ரே/

எத்னை எங்கள் இனத்தவரை இழந்தோம்
அத்தனையும் அமிர்தம் அன்றோ எமக்கு
முத்தான எம்மினம் முடங்கியது ஏனோ
சத்தாக மீண்டும் சாதனை படைப்போம்/

அவலம் காக்க அரும்புங்கள் துளிராய்
தவமாய் கிடைத்த தங்கங்கள் நீங்கள்
அங்கம் இழந்து அல்லல் படுகின்ற
சொந்தங்கள் காக்க சத்தமின்றி வாரும்/

உறவுகள் பிரிந்தே உவாதைப் படுகின்ற
மறவரைக் காக்க மாவீரரே எழுக
எம்மினம் காக்க இழந்தோம் இன்னுயிகள்
எம்மவர் யாவர்க்கும் ஏற்றுவோம் தீபம்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan