கமலா ஜெயபாலன்

விடுமுறை
கல்லூரி விடுமுறை காலத்தின் கட்டாயம்
காலமெல்லாம் உழைக்கும் கடமைக்கு ஓய்வு
அல்லும் பகலும் அயராது உழைக்கும்
அனைவருக்கும் அமைதிக்கு ஒருவேளை ஓய்வு
இறைவன் படைப்பில் இரவு விடுதலை
இதுவும் இல்லையேல் எமக்கெங்கே ஓய்வு
குறையில்லா வாழ்வில்லை கலங்காத நாளில்லை
இருந்தாலும் வேண்டும் எல்லோர்க்கும் ஓய்வு
இயந்திர வாழ்வில் ஓயாத ஓட்டம்
இதற்கும் வேண்டும் இதமான ஓய்வு
காலத்தின் தேவை கட்டாய விடுமுறை
கவனத்தி்ல் கொள்வோம் காப்போம் உடலை/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan