புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை —————— மனித

கவிதை நேரம்-27.03.2024
கவி இலக்கம்-1847
வலியதோ முதுமை
——————
மனித வாழ்வில் மீண்டும் வராது இளமை
வந்து போவது வாழ்வில் என்றும் முதுமை
வாலிபம் கடந்து விட்டதென வருந்தக் கூடாது
வலிமை கொண்டு வாழ்வதே முதுமையின் அழகு
வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம்
காலத்தின் தரும் பெரும் தவம்
வயோதிப வாழ்வில் ஆற்றாமையால் ஒரு ஆளுமை
பேச்சிலும் சொல்லிலும் பெருமை
பெயரளவில் அனுபவசாலிகள் ஒரு திறமை
வாழ்வில் முதுமை பட்ட மரமல்ல
பட்டறிவு கொண்ட பொக்கிசம்
கேட்டாலும் கிடைக்காத பெரும் வரம்
பலருக்கு கிடைக்காத அரிய பதவி
தினம் பாசத்திற்காக அழும் குழந்தை
யார் உதவுவார் என ஏங்கி துடிக்கும் முதுமை
நரை என்பது தலைக்கு பொன் முடி
சுருக்கம் வருவது தளர்ச்சியின் வெளிப்பாடு
நாளை நமக்கும் வரும் முதுமை
வலியதோ முதுமை காலம் வெல்லும்

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading