திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர்

கதிரையில் சொகுசாக
இருந்து கொண்டே
குதிரை ஓடியவரே

திரையில் கரைபுரண்டு
சரையில் பணத்தாளைச்
சுருட்டி அக்கரை பதுக்கிட

துரைமாரது சுரை கழன்று
நிரை நிரையாகப் பிடிபட்டு
சிறைக்கம்பி தேடினரே

வினாடிக்குவினாடி அண்ணன்,
தம்பி ,மனைவி ,மகன் என்றே
ஒட்டுமொத்த குடும்பமும் நடுங்கி
அல்லோலப்பட்டு வாடினரே

பிடித்த பேராசையில் தலை கால்
தெரியாது பிரட்டிய அரசு சொத்தும்
கணக்குக் காட்டாத கொள்ளைத்
திட்டமும் போதை வட்டமும் மெல்ல
வண்டவாளம் ஏறிடத் திண்டாடுவது
பலருக்கும் கொண்டாட்டமே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading