எதுவும் உனக்கு இல்லை

கவிதை 816

என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை

மாளிகை காட்டினாய் கோட்டை காட்டினாய்
கதவின் சாவி ஒருநாள் கைமாறியது
வியர்வையை விதைத்து அறுவடைசெய்த
பணம் இன்னொருவன் எண்ணுகின்றான்
உன் வீட்டில் இன்னொருவன் வாழுக்கின்றான்

உன் நிலம் எங்கே,உன் பொருட்கள் எங்கே உன் சொத்து எங்கே உன் பொக்கிஷம் எங்கே
எனது எனது என்று மார்தட்டிவிட்டு இன்று சுவரில் தூசுதட்டா படமாக காட்சியளிக்கின்றாயே பிறரை அனுபவிக்க விட்டுவிட்டு

ஜெயம்
10-09-2026

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading