வரமானதோ வயோதிபம்
வரமானதோ வயோதிபம் 53
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
பெண்ணே !
பெறுமதியாம் பெருநிதியாய்ப்
பெண்ணவளே யென்றும்
பெறுவதெல்லாம் துன்பமாயும்
புரள்வதில்லைப் பாதை!
முறுவலதே இவள்வாழ்வின்
முகவரியாய்க் கொண்டே
முழுமதியா யெப்போது
முலவுகின்ற தன்மை!
நிறுவுகிறாள் எங்கணுமே
நித்தியமும் தன்னை
நிலமகழும் தோற்றிடுவாள்
இவள்பொறுமை முன்னே!
உறுதியுடன் எட்டுகிறாள்
உயரங்கள் நாளும்
உணர்வினிலே நிறைத்ததெல்லாம்
ஆக்கலெனும் நாதம்!
சந்தணமாய் யுரைபட்டே
சாற்றுகின்ற மேன்மை
சத்தமின்றித் தருவதெல்லாம்
உள்ளத்தின் தூய்மை!
பந்தமெனக் கொள்வதெல்லாம்
பாசமதன் தேவை
பரவசமே தருகின்றாள்
பாரதனிற் பெண்ணே!
அந்தமில்லா வருளாகி
யாக்குகின்ற தாய்மை
அல்லலின்றி ஆயுளெல்லாம்
நிறைக்கட்டு மின்பம்!
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
பெண்ணே !
பெறுமதியாம் பெருநிதியாய்ப்
பெண்ணவளே யென்றும்
பெறுவதெல்லாம் துன்பமாயும்
புரள்வதில்லைப் பாதை!
முறுவலதே இவள்வாழ்வின்
முகவரியாய்க் கொண்டே
முழுமதியா யெப்போது
முலவுகின்ற தன்மை!
நிறுவுகிறாள் எங்கணுமே
நித்தியமும் தன்னை
நிலமகழும் தோற்றிடுவாள்
இவள்பொறுமை முன்னே!
உறுதியுடன் எட்டுகிறாள்
உயரங்கள் நாளும்
உணர்வினிலே நிறைத்ததெல்லாம்
ஆக்கலெனும் நாதம்!
சந்தணமாய் யுரைபட்டே
சாற்றுகின்ற மேன்மை
சத்தமின்றித் தருவதெல்லாம்
உள்ளத்தின் தூய்மை!
பந்தமெனக் கொள்வதெல்லாம்
பாசமதன் தேவை
பரவசமே தருகின்றாள்
பாரதனிற் பெண்ணே!
அந்தமில்லா வருளாகி
யாக்குகின்ற தாய்மை
அல்லலின்றி ஆயுளெல்லாம்
நிறைக்கட்டு மின்பம்!
கீத்தா பரமானந்தன்
