மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

மறுபடி சந்திப்போம்
———-
அடர்ந்த காட்டுக்குள்
அழகிய ஒரு பூமரம்
அழகாகப் பூத்திருந்தது
வேட்டைக்காக வந்த இளவல்
பூமரத்தை கண்டு வியந்து
பாட்டுப் பாடி மரத்தை அழகு பார்த்தான்
வேட்டையில் நாட்டமின்றி
வியந்தவன் ஏங்கிநின்றான்
அந்த அழகான பூமரம்
ஆட்கொண்டது அவன் மனதை
அன்று இரவு முழுக்க
பூமரத்தடியில் தங்கினான்
பூமரத்துடன் பேசினான்
முன்னைய ஜென்மத் தொடர்போ
முற்றிலும் மயங்கி விட்டான்
அதிகாலை அவனையும்
உறக்கம் கவ்விக் கொண்டது
ஆதவன் வருகையில்
அருண்டவன் கண்விழித்தான்
அண்ணார்ந்து பார்க்கையில்
ஆகாயம் தான் தெரிந்தது
அழகிய பூமரம் அங்கில்லை
அவனுக்கோ ஆச்சரியம்
பூமரம் எங்கே எனத் தேடியது
அப்போது ஒரு அசரீரி கேட்டது
வேங்கையே நான் உன் முன்னாள் காதலி
நானே பூமரமாகி நின்றேன்
என்நுழலில் நீ உறங்குவதைக் கண்டு
உவகை அடைந்தேன்
இது எனக்கு போதுமென விடைபெற்றேன்
மறுபடியும் சந்திப்போம்
எனக் கூறியது

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading