வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை
———
சாதனை
நம்பிக்கையின் நாற்று நயம் தரும்
ஊற்று
தும்பிக்கையான் பாதம் தொழுதோர்க்கு தரும் பலவிருது
எம்பிக் குதிப்பவர்கள் எடுத்தாளும்
பம்மாத்து
எகிறித் தள்ளிடுமே இலக்கை விட்டு
சாதனை படைக்க எண்ணி தான் தோன்றித் தனமாய் நடந்து
நீதி வழுவி நிலத்தில் விழுதலே
சாதனை படைத்தோர் சரித்திரம் படைத்தார்
வேதனை பலவென்று வெற்றியும் பெற்றார்
இடையூறு வந்தபோதும் இடைவிடா முயற்சி
தடைகளைந்து தந்ததே பயிற்சி
முயற்சியுடையோர் கற்பனை செயல்கள் சாதனையாச்சு
முன்னேறி செல்ல கால்கள் போதனையாச்சு
விழுந்து விழுந்து எழும்பிச் சாதித்தனர்
விடாமுயற்சியால் தம் சாதனை வென்றனர்
சாதனை புரிந்தோரின் பட்டியல் போட்டாலே
அதுவும் சாதனை தானிங்கே கேட்டால்
சாதனை செய்கிறார் இளைய தலைமுறை
நீதியின் நலையால் வெல்கிறார் பலமுறை
இளையோரின் இன்றைய சாதனை
வியக்க. வைக்கிறது
பூவுலகோர் போற்ற புன்னகை புரிகிறது
கெங்கா ஸ்ரான்லி
20.2.23
