கெங்கா ஸ்ரான்லி

மனித நேயமே
—————-
மனித நேயம் மாந்தர்களுக்கா
ஐந்தறிவுள்ள உயிரினத்திற்கும் உண்டு
ஆற்றிவுள்ள மனிதனோ அதை மறந்தபடி
அற்பமான வாழ்க்கை வாழுபிறான்
அன்னை திரேசா எங்கோ பிறந்து
இந்தியா வந்து மனிதநேயத்தினால்
உயர்ந்து நின்றாரே
டாக்டர் அப்துல் கலாம் எவ்வளவு மனித நேயம் உள்ள மனிதர்
தங்களுக்கு என்றில்லாது மனித்த்துடன்
வாழ்ந்தவர்கள்
ஏழைகளிடம் சுரண்டும் மனிதர்
ஏழைகளின் துயரம் பார்ப்பதில்லை
முன்பு மனித நேயம் இருந்தது
முன்னோர்கள் முறையாக வாழ்ந்தனர்
பின்னர் காலப் போக்கில் கடமை மறந்து
கண்ணியம் இல்லா பணமே என வாழுகின்றார்
இங்கே எங்கே மனித நேயம் வாழுகிறது
உறவுகளுக்குள் அடிபாடு சொத்து பிரச்சனை
சகோதரதரத்திற்குள் வேற்றுமை தராதரத்த்தில்
இப்படி இருக்கையில் மனிதம் எங்கே வாழும்
நாய்கூடக் காட்டும் எஐமானிடம் விசுவாசம்
தாய் தந்தையை வெறுக்கும் பிள்ளைகளிடம்
எப்படி வரும் மனித நேயம்
மனித நேயமே மரணித்து விட்டதோ
மனதிலே எண்ணத் தோன்றும்
ஆனாலும் கொஞ்சம் மனித நேயம்
இருக்கத்தான் செய்கிறது
வெளியில் மனிதம் பற்றி பேசுவார்
உள்ளே எப்படி பழி வாங்கலாம் என
நினைப்பார்
போர் வெறி கொலை வெறி எல்லாம் ஏன்
மனித்த்துடன் மனித நேயம் பேணலாமே
மக்களும் களிப்புடன் இருக்கலாமே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading